சுடச்சுட

  

  திருவாரூரில் மாவட்ட உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், உலக மகளிர் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

  திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரா. மாலதி தலைமையில் நடைபெற்ற விழாவில் சம உரிமையும், சம வாய்ப்பும் என்ற தலைப்பில் சிஐடியு மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு சிறப்புரையாற்றினார்.

  விழாவில் எஸ். சித்ரா (கூட்டுறவு ஊழியர் சங்கம்), ஆர். விஜயா (மின் ஊழியர் மத்திய அமைப்பு), என். உமா (அங்கன் வாடி ஊழியர்), ஏ.பி.டி. லோகநாயகி (உள்ளாட்சி ஊழியர் சங்கம்), ஆர். ரஷ்யபிரியா, டி. உஷாராணி (எல்.ஐ.சி), வி. தவமணி, பிரேமா, என். சாந்தி (அங்கன்வாடி), ஏ. வடிவழகி, ஆர். வசந்தா (முறைசாரா தொழிலாளர்) பி. மணிமதி, பத்மாவதி (மருத்துவக் கல்லூரி ஊழியர் சங்கம், கே. வனிதா (லிகாய்), நாகவல்லி (சாலையோர வியாபாரிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

  சிஐடியு தலைவர்கள் டி. முருகையன், ஜி. பழனிவேல், பாண்டியன், லெனின், அன்பழகன், ஆர். கருணாநிதி, அமலதாஸ், மோகன், ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்று மகளிர் தின வாழ்த்து கூறினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai