சுடச்சுட

    

    நன்னிலம் பகுதி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு

    By திருவாரூர்,  |   Published on : 10th March 2016 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்துக்குள்பட்ட பகுதி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் எம். மதிவாணன் ஆய்வு மேற்கொண்டார்.

    2016 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நன்னிலம், பனங்குடி, மாப்பிள்ளைக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

    இந்த மையங்களில் புதன்கிழமை ஆட்சியர் எம். மதிவாணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வசதிக்காக கைப்பிடியுடன் கூடிய சாய்தள வசதி, குடிநீர், மின்வசதி ஏற்படுத்த வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து, மாப்பிள்ளைக்குப்பம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமையவுள்ள வாக்குசாவடி மையத்தை பார்வையிட்டு வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக நடைபடிகள் அமைந்துள்ளதா, மின்விளக்கு வசதிகள் உள்ளனவா, வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக சென்று வருவதற்கு வழிகள் அமைக்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது.

    ஆய்வின்போது, நன்னிலம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அசோகன் உடனிருந்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai