சுடச்சுட

  

  "நானோ தொழில்நுட்பம் எதிர்காலத்தின் வரப்பிரசாதம்'

  By திருவாரூர்  |   Published on : 10th March 2016 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நானோ தொழில்நுட்பம் எதிர்காலத்தின் ஒரு வரப்பிரசாதம் என்று பொறையாறு தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி துணை முதல்வர் எஸ். ஜான்சன் ஜெயக்குமார் கூறினார்.

  திருவாரூர் திருவிக கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற இயற்பியல் மன்றத் தொடக்க விழாவில் அவர் பேசியது:

  நானோ தொழில்நுட்பத்தின் மூலம் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் தேவை ஆகியவைகளை சிறப்பாகக் கையாளலாம்.

  நானோ தொழில்நுட்பம் பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, மின்சக்தி திட்டங்கள், மருத்துவம், பொழுதுப்போக்கு, தொலைத்தொடர்பு, இயற்கை வேளாண்மை ஆகிய துறைகளில் மிகவும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது.

  சிறப்பாக தனிமனிதனுக்கு உதவும் மருத்துவம் மற்றும் உணவு உற்பத்தித் துறைகளில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்பதால் இத்தொழில்நுட்பம் எதிர்காலத்தின் ஒரு வரப்பிரசாதம் என்றார்.

  திருவிக கல்லூரி முதல்வர் பெர்னிஸ்பென்னட் தலைமையில் நடைபெற்ற விழாவில், இயற்பியல் துறைத் தலைவர் துரை. பென்னி அன்புராஜ், மன்றச் செயலர் முதுநிலை மாணவி கே. சக்தீஸ்வரி, பொருளாளர் த.க. தமிழ்பாரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai