சுடச்சுட

  

  மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்: மாதர் சம்மேளனம்

  By திருத்துறைப்பூண்டி,  |   Published on : 10th March 2016 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்யப்படும் என்று இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தெரிவித்துள்ளது.

  உலக மகளிர் தினத்தையொட்டி, திருத்துறைப்பூண்டியில் பெண்களின் வாழ்வை சீரழிக்கும் மதுவை ஒழித்திடுவோம், மாதர்களை பாதுகாத்திடுவோம் என்ற கோரிக்கை முழக்கப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவி ஏ. ஜெயா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எஸ். தமயந்தி முன்னிலை வகித்தார்.

  இதுகுறித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில துணைச் செயலாளர்கள் எம். கண்ணகி, வி. மஞ்சுளா ஆகியோர்

  கூறியது:

  தமிழகத்தில் மதுவினால் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியை ஆதரித்து, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் பிரசாரம் செய்யவுள்ளோம் என்றனர்.

  கூட்டத்தில், மாதர் சம்மேளன தேசியக்குழு உறுப்பினர் மாலா பாண்டியன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர். அம்புஜம், மாவட்ட நிர்வாகிகள் ஆர். சுலோச்சனா, பி. பாஸ்கரவள்ளி, எஸ். தமிழ்ச்செல்வி, பி. மீனாம்பாள், ஜி. மீனாம்பிகை, வி. நிர்மலா, ஆர். உஷா, கே. சுஜாதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  முன்னதாக, புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று தெற்கு வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிறைவடைந்தது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai