சுடச்சுட

  

  வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

  இதை முன்னிட்டு, வியாழக்கிழமை அதிகாலை அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், புனிதநீர் கலசங்களுக்கும், 1,008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனிதநீருக்கும் சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

  மதியம் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், பூர்ணாஹுதி, பிற்பகல் 2 மணிக்கு குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

  தொடர்ந்து புனிதநீர் கலசங்கள் பிரகார உலா வந்ததும், சுவாமி, அம்பாள், குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றது. தங்கக் கவச அலங்காரத்தில் குருபகவான் காட்சியளித்தார்.

  இதற்கான ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையர், கோயில் செயல் அலுவலர் ரா. சாத்தையா, அறநிலைய உதவி ஆணையர், கோயில் தக்கார் செ. சிவராம்குமார், உபயதாரர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai