சுடச்சுட

    

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழுக் கூட்டம்

    By திருவாரூர்  |   Published on : 11th March 2016 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எச். பீர்முகம்மது தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    புதிதாக இஸ்லாத்தை  தழுவோரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதால் அரசின் இடஒதுக்கீட்டை பெற முடியவில்லை. எனவே, அவர்களை பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஆயுள் தண்டனை என்பது 12 ஆண்டுகள் என்கிற முன்பிருந்த நிலையையே கடைப்பிடித்து அதிக ஆண்டுகள் சிறையில் வாடுவோரை விடுதலை செய்ய வேண்டும். முத்துப்பேட்டையில் ஆக்கிரமிப்பை அகற்றுவதாகக் கூறி பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாலத்தை இடித்ததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இடித்த பாலங்களை கட்டிக்கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்டச் செயலர் அப்துல்மாலிக், துணைச் செயலர்கள் சபிபுல்லா, சக்கரைகனி, பொருளாளர் முஹமது இலியாஸ், மாவட்ட மேலாண்மைக் குழுத் தலைவர் சையது இப்ராஹிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai