சுடச்சுட

    

    தேர்தல் ஆலோசனைக் கூட்டத்துக்கு அனைத்துக் கட்சியினரையும் அழைக்கக் கோரிக்கை

    By மன்னார்குடி  |   Published on : 11th March 2016 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரால் நடத்தப்படும் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டங்களுக்கு பெரிய, சிறிய கட்சிகள் என பாகுபாடு பார்க்காமல் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைக்க வேண்டுமென மன்னார்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    இதுகுறித்து காங்கிரஸ் நகரத் தலைவர் ஆர். கனகவேல்: சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து கடந்த பிப். 16 மற்றும் மார்ச் 9 ஆம் தேதி நடைபெற்ற அனைத்து அரசியல் கட்சி கூட்டங்களில்  காங்கிரஸுக்கு அழைப்பில்லை.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஐ.வி. நாகராஜன்: தேர்தல் விதிகளின்படியும், சட்டம் - ஒழுங்குடன் அமைதியாக நடந்து முடிவதற்குரிய கருத்திசைவை, ஒத்துழைப்பை உருவாக்கத்தான் அனைத்து அரசியல் கட்சியினரை அழைத்துப் பேசுவதுதான் கூட்டத்தின் நோக்கம். மிக முக்கியமான இக்கூட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலருக்கு முறையாக தகவல் அளிக்காமல் குறிப்பிட்ட ஒரு சில அரசியல் கட்சிகளை மட்டும் அழைத்து கூட்டம் நடத்தியுள்ள தேர்தல் நடத்தும் அலுவலரின் செயல் கண்டிக்கத்தக்கது.

    மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுக்கும்  தேர்தல் ஆலோசனைக் கூட்டம் குறித்து எந்த அழைப்பும் இல்லை  என்றும், பெரிய கட்சிகளை மட்டும் அழைத்து தொடர்ந்து கூட்டம் நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட மதிமுக செயலர் பி. பாலச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் வை. செல்வராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டப் பொருளாளர் வ. பார்வேந்தன் ஆகியோர் தெரிவித்தனர்.

    தமிழக சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்து வந்த தேமுதிகவுக்கு தேர்தல் குறித்து நடைபெற்ற கூட்டங்களுக்கு இதுவரை அழைப்பில்லை என்று அக்கட்சியின் நகரச் செயலர் எம்.எஸ். இளங்கோ தெரிவித்தார்.

    இதேபோல், தமாகா நகரத் தலைவர் கே.எஸ். நடனபதி, பாமக மாவட்டத் தலைவர் சீனி. தனபால் ஆகியோரும் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைக்கப்படாதது குறித்து தெரிவித்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai