சுடச்சுட

    

    பயிர் பாதிப்பு நிவாரணத் தொகை வழங்குவதில் முறைகேடு: எம்எல்ஏ

    By மன்னார்குடி  |   Published on : 11th March 2016 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடி தொகுதிக்குள்பட்ட பகுதியில் மழை, வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிவாரணத் தொகையில் நடைபெறுகிறது என்று சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியதில் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரணத் தொகையை காலம் தாழ்த்தி தமிழக அரசு அறிவித்து, தற்போது வழங்கி வருகிறது. இதற்கான கணக்கெடுப்புகள் யாரால் எடுக்கப்படுகிறது என வெளிப்படையாக தெரியாத நிலையில் இதற்கான பயனாளிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் பாதிப்புக்கு நிவாரணம் ரூ. 5,400 என குறைந்த தொகையை ஒதுக்கீடு செய்திருப்பதாக விவசாயிகள் கூறி வரும் நிலையில், அதிலும் மிகக் குறைந்த சதவீதம் பாதித்துள்ளதாக கணக்கிட்டுள்ளனர். குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியினர் சிபாரிசு செய்கின்றவர்களுக்கு மட்டுமே நிவாரணத் தொகை வழங்குவதற்கு முன்னுரிமை தரப்படுகிறது.

    நிவாரணத் தொகை பயனாளிகள் பட்டியலை ஆங்கிலத்தில் அச்சடித்து வங்கிகளில் வெளியிட்டிருப்பதால், அவற்றை படித்து தங்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளதா என்பதை புரிந்துகொள்ள முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். வழங்கப்படும் நிவாரணத் தொகையில் ரூ. 500 வரை பிடித்தம் செய்வது போன்ற பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. எனவே, இப்பிரச்னையில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும். ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்ததைப்போல வந்திருக்கின்ற நிவாரணத் தொகையை விவசாயிகளின் கையில் வழங்காமல், அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தி வங்கிக் கணக்குப் புத்தகத்திலும் வரவு வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai