Enable Javscript for better performance
மன்னார்குடி அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு

    By மன்னார்குடி  |   Published on : 11th March 2016 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் மார்ச் 13 ஆம் தேதி நடைபெறவிருந்த பட்டமளிப்பு விழா தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று கல்லூரி முதல்வர் சிவ. கார்த்திகேயன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா, மார்ச் 13 ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெறுவதாக இருந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் தேதியை அறிவிப்பு செய்துள்ளதை அடுத்து, தமிழக அரசின் ஆணைக்கிணங்க கல்லூரியின் பட்டமளிப்பு விழாவை தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும், மீண்டும் விழா நடைபெறும் புதிய தேதியை செய்தித்தாள் மூலமாகவும், பட்டம் பெறும் மாணவர்களுக்கு தொலைபேசி வாயிலாகவும் தெரிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai