சுடச்சுட

    

    முத்துப்பேட்டையில் அனைத்துக் கட்சி கூட்டம்

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 11th March 2016 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமை வகித்து பேசியது:

    முத்துப்பேட்டை நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சுவர்களில் எவ்வித அரசியல் கட்சி விளம்பரங்களும் செய்யக்கூடாது.

    கொடி மரங்கள், விளம்பரப் பலகைகளை 24 மணிநேரத்தில் அகற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். பொதுக்கூட்டம் நடத்துவதற்காக தனி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    இதில் நகரில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ராயல் மோட்டார்ஸ் எதிர்புறத்திலும், அதேபோல் மன்னார்குடி சாலை ரயில்வே கேட் அருகில் உள்ள தனியார் இடத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட பகுதியில் நடத்திக் கொள்ளலாம். பொதுக்கூட்டங்கள், தெருமுனைக்கூட்டங்கள் நடத்த அனுமதிக் கோர ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

    தேர்தல் விதிமுறை மீறல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை பொதுமக்களும், கட்சியினரும் நேரடியாக எதிர்கொள்ளக்கூடாது. காவல்துறையை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம். தகவல் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட இடத்துக்கு காவல்துறையினர் உடனே வந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

    கூட்டத்தில் அதிமுக சார்பில் ஒன்றியச் செயலர் ஆர்.கே.பி. நடராஜன், நகரச் செயலர் மங்கள் அன்பழகன், கோட்டூர் ஒன்றியச் செயலர் ஜீவானந்தம், இலக்கிய அணி செயலர் தங்கமணி மற்றும் ராஜமாணிக்கம், திமுக சார்பில் நகரத் துணைச் செயலர் நவாஸ்கான், பேரூராட்சி உறுப்பினர் அய்யப்பன், மாவட்ட பிரதிநிதி இப்ராஹிம், காங்கிரஸ் சார்பில் மாவட்ட துணைத் தலைவர் தாஹிர், நகரத் துணைத் தலைவர்கள் குலாம் ரசூல், வேல்முருகன், வட்டாரத் துணைத் தலைவர் தங்கராஜன், தமாகா சார்பில் மாவட்ட இளைஞர் அணி தலைவர் காமராஜ், பாஜக சார்பில் ஒன்றியச் செயலர்  செல்வம், எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நிர்வாகிகள் நெய்னா முகம்மது, மாலிக், மர்சூக், தவ்ஹித் ஜமாத் சார்பில் முகம்மது மீரா லெப்பை கட்டி, ஹாஜா முகைதீன், மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ராஜேந்திரன், கார்த்திக், ஊராட்சி மன்றத்  தலைவர்கள் ஜெயராமன் வைத்தியநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai