Enable Javscript for better performance
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு திறன் மேம்பாட்டு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு திறன் மேம்பாட்டு பயிற்சி

    By மன்னார்குடி  |   Published on : 11th March 2016 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடி அருகேயுள்ள சவளக்காரன், கோட்டூர் ஆகிய இடங்களில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு திறன் மேம்பாட்டு பயிற்சி மன்னார்குடி ஜேசிஐ மன்னை அமைப்பின் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    சவளக்காரன் ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஜேசிஐ அமைப்பின் தலைவர் எஸ். கமலப்பன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கே. ரவிச்சந்திரன், அமைப்பின் முன்னாள் தலைவர் ஆர். செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சர்வதேச பயிற்சியாளர் வி.எஸ். கோவிந்தராஜன் கலந்துகொண்டு, இலக்கு நிர்ணயித்தல், நேர நிர்வாகம், தன்னை அறிதல், தேர்வுக்கான தயாரிப்பு முறைகள் குறித்து பயிற்சி அளித்தார். இதில் இப்பள்ளியைச் சேர்ந்த 130 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றனர்.

    கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பின் செயலர் பால. பாரதத் தமிழன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக ஜேசிஐ மண்டல பயிற்சியாளர்கள் எஸ். அன்பரசு, எஸ். ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டு 123 மாணவிகளுக்கு பயிற்சி அளித்து, வெற்றி நிச்சயம் கையேட்டை வழங்கினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai