Enable Javscript for better performance
அனுமதியின்றி சுவர் விளம்பரம்: 3 அரசியல் கட்சிகள் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி சுவர் விளம்பரம்: 3 அரசியல் கட்சிகள் மீது வழக்கு

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 12th March 2016 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்துறைப்பூண்டி பகுதியில் உரிய அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்ததாக 3 அரசியல் கட்சிகள் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.

    வரும் மே 16 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், பறக்கும் படையினர், காவல்துறையினர் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பது குறித்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் அமுதாராணி, ரோந்து பணியில் ஈடுபட்டபோது விட்டுக்கட்டி, வரம்பியம், சேகல்மடப்புரம் ஆகிய பகுதிகளில் உரிய அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்திருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட 3 அரசியல் கட்சிகள் மீது திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai