Enable Javscript for better performance
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கணினி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கணினி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

    By திருவாரூர்  |   Published on : 12th March 2016 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் குறைந்த கட்டணத்தில் கணினி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று மேலாண்மை நிலைய முதல்வர் எஸ். கண்ணன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    அரசு நிர்ணயித்த குறைந்த கட்டணத்தில் கணினி படிப்புகளான எம்எஸ்ஆபீஸ், டிடிபி, டாலி 9.0, டிசிஏ ஆகிய கணினி பட்டயப் பயிற்சிகள் பெற எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்ற ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

    மேற்குறித்த படிப்புகள் குறித்து வகுப்பறை, செய்முறை பயிற்சிகள் அனுபவம் பெற்ற கணினி விரிவுரையாளர்கள் மூலம் மேலாண்மை நிலையத்தில் பயிற்சியளிக்கப்படும். பயிற்சி முடிவில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கணினி சான்றிதழ்  வழங்கப்படும். இந்தச் சான்றிதழை வேலைவாய்ப்பு  அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    பயிற்சியை சிறந்த முறையில் முடிப்பவர்கள் சுயதொழில் செய்ய, ஆப்செட்ஸ், கணினி கல்வி மையங்கள், மருந்தகங்கள், உணவகங்கள், வணிக வங்கிகள், அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் கணினி வேலை செய்ய கூடுதல் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ளலாம்.

    தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர், கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படித்து வருகிறவர்கள் தற்போதைய படிப்புக்கு இடையூறு இல்லாமல் தமது கல்வித் தகுதியை உயர்த்திக்கொள்ளலாம்.

    சேர விரும்புவோர் மார்ச் 27-ஆம் தேதிக்குள் திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் மார்பளவு புகைப்படத்துடன் நேரில் சென்று ரூ. 50 செலுத்தி விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04366-227233, 9442346788 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai