சுடச்சுட

  

  மன்னார்குடியில், ஜேசிஐ மன்னார்குடி பவர் (மின்வாரிய பொறியாளர்கள்) என்ற அமைப்பின் கிளை தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

  விழாவுக்கு ஜேசிஐ தஞ்சாவூர் கிளை தலைவர் எஸ். செந்தில்நாதன்  தலைமை வகித்தார். அமைப்பின் முன்னாள் சட்ட ஆலோசகர்  ஜி. வெங்கடேசன், மண்டல தலைவர் எஸ். ரமேஷ், தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆர். சதீஷ்பாபு, மண்டல துணைத் தலைவர் எஸ். முகமது ஹாஜா மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  சிறப்பு அழைப்பாளராக தேசிய பயிற்சியாளர் எஸ். சம்பத் பங்கேற்று, ஜேசிஐ மன்னார்குடி பவர் என்ற புதிய அமைப்பை தொடங்கிவைத்து, புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

  புதிய நிர்வாகிகள் விவரம்:

  தலைவர் - பி.வி. பிரபு, செயலர் - பி. மோகன், பொருளாளர் - கே. வெங்கடேசன், இணைச் செயலர் - வி. சீனிவாசகார்த்திகேயன், மகளிர் பிரிவு தலைவர் - பி. ஜெயஸ்ரீ, இளையோர் பிரிவு தலைவர் - எஸ். மணிகண்டன் மற்றும் துணைத் தலைவர்களாக 4 பேரும், இயக்குநர்களாக 5 பேரும் பதவியேற்றுக்கொண்டனர்.

  இதில் ஜேசிஐ மன்னை தலைவர் - எஸ். கமலப்பன், ஜேசிஐ மன்னார்குடி தலைவர் எம். துரை, ஜேசிஐ ராஜமன்னார்குடி தலைவர் ஜி. சபரிகிரிநாதன், மன்னார்குடி கேசவன், தலைவர் ஏ. அருண் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai