Enable Javscript for better performance
தேர்தல் பணி வழங்க கிராம உதவியாளர் சங்கம் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் பணி வழங்க கிராம உதவியாளர் சங்கம் கோரிக்கை

    By நீடாமங்கலம்  |   Published on : 12th March 2016 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பணி வழங்கி, அதற்கான சிறப்பு ஊதியம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை சென்னையில் சந்தித்து, தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில தலைவர் ஆர். ராஜசேகர், மாநில பொதுச் செயலர் எஸ். தமிழ்ச்செல்வன் ஆகியோர் அளித்த கோரிக்கை மனு விவரம்:

    கிராம உதவியாளர்களுக்கு வாக்குப் பதிவு நாளில் அடையாளம் காட்டும் அலுவலர்களோ அல்லது வாக்குச்சாவடி உதவியாளராகவோ பணி நியமனம் வழங்கி அதற்கான ஊதியம் வழங்க வேண்டும்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் இரண்டு மாதம் மேற்கண்ட தேர்தல் பணிகளை சிறப்பாகச் செய்யும் கிராம உதவியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்க வேண்டும்.

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பணிக்கான சிறப்பு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.

    எனவே, அந்த ஊதியத்தை வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மனுவை பெற்றுக்கொண்ட தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் என்று சங்க நிர்வாகிகள் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai