சுடச்சுட

    

    நீடாமங்கலம் பகுதியில் 6 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

    By நீடாமங்கலம்  |   Published on : 12th March 2016 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நீடாமங்கலத்தில் 6 வாக்குச்சாவடிகள் பதற்றமானையாக கண்டறியப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

    நடத்தை விதிமுறைகள்படி சுவர் விளம்பரங்கள், விளம்பரத் தட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.

    நீடாமங்கலம் பகுதியிலும் மாவட்ட உயரதிகாரிகள், வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீடாமங்கலம் வட்டத்தில் மொத்தம் 131 வாக்குப் பதிவு மையங்கள் செயல்படவுள்ளன.

    மன்னார்குடி தொகுதிக்குள்பட்ட நீடாமங்கலம் வட்டத்தில் சித்தமல்லி, நீடாமங்கலம் இலக்குமி விலாச நடுநிலைப் பள்ளி ஒளிமதி, பூனூர், புள்ளவராயன்குடிகாடு, ராயபுரம் ஆகிய 6 இடங்கள் பதற்றமானைவையாக கண்டறியப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த வாக்குப் பதிவு மையங்களில் உளவுப் பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai