சுடச்சுட

  

  பேருந்து மோதி இறந்தவர் அடையாளம் தெரிந்தது

  By மன்னார்குடி  |   Published on : 12th March 2016 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மன்னார்குடியில் பேருந்து மோதியதில் உயிரிழந்த முதியவர் குறித்த விவரம் வியாழக்கிழமை தெரியவந்தது.

  கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சந்தைபேட்டை, உழவர்சந்தை அருகேயுள்ள சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது அந்த வழியாகச் சென்ற தனியார் பேருந்து மோதியது. இதில் காயமடைந்த முதியவரை அப்பகுதியினர் மீட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அங்கு அவர் உயிரிழந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை. இதையடுத்து, அவரது சடலம் மன்னார்குடி பிணவறையில் வைக்கப்பட்டது.

  இதுகுறித்து மன்னார்குடி போலீஸார் விசாரணை நடத்தியதில், மஸ்தான்பள்ளி தெருவைச் சேர்ந்த வைத்தியநாதன் (74) என்பது வியாழக்கிழமை இரவு தெரியவந்தது.

  மனைவி காமாட்சி, மகன் பாபு ஆகியோர் அடையாளம் காட்டி உறுதிபடுத்தியதை அடுத்து, பிரேத பரிசோதனைக்குப் பிறகு சடலம் குடும்பத்தினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai