சுடச்சுட

    

    முத்துப்பேட்டையில் நகைக் கடைகள் தொடர் அடைப்பு

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 12th March 2016 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தங்க நகைகள் மீதான கலால் வரியை ரத்து செய்யும் வரை தொடர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டு வியாழக்கிழமை முதல் தொடர் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக, அனைத்து நகை வியாபாரிகள் மற்றும் அனைத்து ஆபரணத் தொழிலாளர்கள் சங்க அவசரக் கூட்டம் புதுக்காளியம்மன் கோயில் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினரும், முத்துப்பேட்டை சங்கத் தலைவருமான எஸ்.என்.ஆர்.சி. ராஜசேகர் தலைமை வகித்தார். சங்கப் பொருளாளர் பக்கிரிசாமி பத்தர், நிர்வாகிகள் மனோகரன், மகாலிங்கம், கணேசன், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், தங்க நகை மீதான ஒரு சதவீத கலால் வரியை ரத்து செய்யக் கோரி, கடைகளை அடைப்பது குறித்து மாநில சங்கம் எடுக்கும் முடிவுக்கு உள்பட்டு தொடர் கடையடைப்பில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai