சுடச்சுட

  

  திருநெல்வேலியில், சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சி. சிலையின் மீது தார்ப்பூசி அவமதிப்பு செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, திருவாரூரில் வ.உ.சி. நலப் பேரவையினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  கடந்த சில நாள்களுக்கு முன்பு திருநெல்வேலி நகர் தெப்பக்குளம் அருகில் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளையின் உருவச் சிலை மீது மர்ம நபர்கள் தார் ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர்.

  சம்பவம் நிகழ்ந்து ஒருவாரமாகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

  இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, திருவாரூர் வ.உ.சி. நலப் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  ஆர்ப்பாட்டத்துக்கு பேரவையின் மாநில துணைத் தலைவர் அமுதன் தலைமை வகித்தார்.

  ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர் முத்து துரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai