சுடச்சுட

    

    அரசுப் பொதுத் தேர்வு: கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

    By நீடாமங்கலம்  |   Published on : 13th March 2016 06:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு பொதுத் தேர்வைக் கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன் நீடாமங்கலத்தில் சனிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:

    பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வைக் கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்குவது அவசியமாகும். திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 14 ஆயிரத்து 45 மாணவ, மாணவிகள் மேல்நிலை தேர்வு எழுதி வருகின்றனர்.

    தேர்வு காலம் என்பதால் உரிய நேரத்தில் பேருந்தை பிடித்து தேர்வு மையங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை மாணவர்களுக்கு உள்ளது.

    ஆனால் சில பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் மாணவர்களை புறக்கணித்து பேருந்துகள் நிற்காமல் சென்று விடுகின்றன. தற்போது பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வும் தொடங்கவுள்ளது. மாணவர்களின் நலன்கருதி காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் முன்வர வேண்டும்.

    மேலும் அனைத்து நிறுத்தங்களிலும் பேருந்துகள் நின்று செல்ல ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும் என ஐ.வி.நாகராஜன் கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai