சுடச்சுட

    

    ஏழை மக்களை கல்வி சென்றடைய வேண்டும் என அறிவியல் இயக்க முன்னோடி பாண்டிச்சேரி கல்வியாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

    நீடாமங்கலத்தில் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் சங்கம் சார்பில் பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

    சங்கத்தின் திருவாரூர் மாவட்டத் தலைவர் பி.விக்டர்ராஜ் தலைமை வகித்தார். தஞ்சை மண்டல செயலாளர் டி.புகழேந்தி, மாநில செயற்குழு உறுப்பினர் ப.அறிவழகன், மகளிரணிச் செயலாளர் தை.லீனஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ந.சம்பத் வரவேற்றார்.

    மாவட்டப் பொருளாளர் க.குமரேசன் அறிக்கை வாசித்தார்.

    பயிலரங்கில் கலந்து கொண்டு அறிவியல் இயக்க முன்னோடி பாண்டிச்சேரி கல்வியாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி பேசியது:

    கல்வித் துறையில் காலிப் பணியிடங்கள் நிறைய உள்ளன. அந்த பணியையும் சேர்த்து தற்போது பணியாற்றுபவர்கள் செய்தாக வேண்டிய நிலை உள்ளது. குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்துவது அவசியமானதாகும். பின்லாந்து நாட்டில்தான் குழந்தைகள் மகிழ்ச்சியாக பள்ளிக்குச் செல்கின்றனர்.

    மாணவர்களை படைப்பாளியாக்க வேண்டும். நிர்வாகத்தில் உள்ளவர்கள் அடித்தட்டில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். பல மாவட்ட ஆட்சியர்களை மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து பேச வைத்த இயக்கம் அறிவொளி இயக்கம். ஏழை மக்களை கல்வி சென்றடைய வேண்டும்.

    பணியில் அன்றாட சிக்கல்கள் பல இருந்தாலும் கல்வியில் நமக்கு ஒரு ஈடுபாடு தேவைப்படுகிறது இவ்வாறு அவர் கூறினார்.

    பயிலரங்கில் தமிழ்நாடு உதவித் தொடக்கல்வி அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ரா.ரவிச்சந்திரன்,தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் கு.மெய்யப்பன்,தமிழ்நாடு அறிவியல் இயக்க திருவாரூர் மாவட்ட துணைத்தலைவர் நீலன்.அசோகன், மாவட்ட இணைச்செயலாளர்  யு.எஸ.பொன்முடி உள்பட பலரும் கலந்து கொண்டு பேசினர்.நிறைவில் ச.கலியுகவரதராஜன் நன்றி கூறினார்.

    படம்:1.நீடாமங்கலத்தில் சனிக்கிழமையன்று தமிழ்நாடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற பயிலரங்கில் பேசுகிறார் அறிவியல் இயக்க முன்னோடி கல்வியாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி.

    பயிலரங்கில் கலந்து கொண்ட உதவித்தொடக்கக்ல்வி அலுவலர்கள். 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai