சுடச்சுட

  

  கடத்தல் மதுப்புட்டிகள் பறிமுதல்: ஒருவர் கைது

  By திருத்துறைப்பூண்டி  |   Published on : 13th March 2016 06:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருத்துறைப்பூண்டி அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் 400 மதுப்புட்டிகளும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டன.

  பேரவைத் தேர்தலையொட்டி காவல்துறை, பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலை பாமணி கிராமத்தில் முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோகரன் உள்ளிட்டோர் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகையில் இருந்து வந்த காரை மடக்கி சோதனையிட்டதில் 180 மி.லி. கொண்ட 400 மதுப்புட்டிகள் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

  இதையடுத்து காரையும், காரில் இருந்த மதுப்புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸார் காரை ஓட்டி வந்த தஞ்சை மாவட்டம், மதுக்கூரைச் சேர்ந்த பகுருதீன் என்பவரை கைது செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai