சுடச்சுட

  

  கணினி மூலம் வணிகவரி பரிவர்த்தனை திட்டம்: தாற்காலிகமாக நிறுத்தி வைக்க கோரிக்கை

  By மன்னார்குடி  |   Published on : 13th March 2016 06:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கணினி மூலம் வணிகவரி பரிவர்த்தனை செய்யும் திட்டத்தை தேர்தல் முடியும் வரை தாற்காலிகமாக வணிகவரித் துறை நிறுத்தி வைக்க வேண்டும் என மன்னார்குடி வர்த்தக சங்கப் பொதுக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

  மன்னார்குடி வர்த்தக சங்கப் பொதுக் குழுக் கூட்டம் அதன் தலைவர் கே.ஜெ.ஆர். பாரதி ஜீவா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

  வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி முக்கிய இடங்களில் விழிப்புணர்வு போர்டுகள் வைப்பது, சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு அளிப்பது தொடர்பாக வர்த்தகர்களிடம் கருத்தறிந்து முடிவு செய்வது,"முத்ரா' வங்கி கடன் திட்டம் மூலம் வர்த்தகர்களுக்கு கடன் பெற்றுத் தரும் வகையில் மன்னார்குடியில் வங்கியாளர்கள் கூட்டத்தை நடத்துவது, கணினி மூலம் வணிகவரி பரிவர்த்தனை செய்யும் திட்டத்தை வரும் 29-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவர வணிகவரித் துறை முடிவு செய்துள்ளது.

  இதற்கு தமிழகம் முழுவதும் வர்த்தகர்கள் ஆட்சேபனை தெரிவித்து வரும் நிலையில் தற்போது பேரவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் வர்த்தகர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. எனவே, தேர்தலுக்கு பிறகு புதிதாக பொறுப்பேற்கவுள்ள அரசுடன் வர்த்தகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த கருத்தை பெற்ற பின் இத்திட்டத்தை வணிகவரித் துறையினர் நடைமுறைக்கு கொண்டு வரலாம் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  கூட்டத்தில் வர்த்தக சங்க முன்னாள் தலைவர்கள் சு.ஞானசேகரன், ஏ.சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலர் ஆர்.வி.ஆனந்த் பேசினார். பொருளாளர் ஆர்.சங்கரசுப்பு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.

  முன்னாள் பொருளாளர் கே.சபாபதி, துணைத் தலைவர்கள் ஆர்.ராஜேந்திரன், ஜீ.வி.ராமகிருஷ்ணன், சிவ.தியாகராஜன், நகைக் கடை உரிமையாளர் சங்கத் தலைவர் வி.ஆர்.கே.ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் சிவ.காமராஜ் வரவேற்றார். பிரபாகரன் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai