Enable Javscript for better performance
கொள்ளையடிக்க திட்டமிட்ட 7 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் அருகே கூட்டாக கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டிய 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    திருவாரூர் தாலுகா காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீஸார் காட்டூர் மயானப் பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் கும்பலாக இருந்தவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் திருவாரூரைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் வெற்றிவேல் (35), கோவிந்தராஜ் மகன் குணசேகரன் (33), அம்பிகாபதி மகன் விமல்குமார் (26), தாமோதரன் மகன் ஸ்டாலின் (30), நாகையன் மகன் ராம்பிரசாத் (24), ரவி மகன் பிரசாத் (26), புலிவலம் ரவி (40) ஆகியோர் என்பதும், இவர்கள் 7 பேரும் சேர்ந்து, கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து, 7 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் அனைவர் மீதும் வழக்குப் பந்திந்து விசாரணை மேற்கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai