Enable Javscript for better performance
தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    கொரடாச்சேரியில் பேரவைத் தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

    கலை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தொடக்கி வைத்துப் பேசியது:

    இந்திய தேர்தல் ஆணைய அறிவுரைபடி வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது.

    வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களின் பெயர் சேர்க்காமல் அல்லது விடுபட்டு இருந்தால் உடனடியாக தொடர்புடைய அலுவலரை அணுகி பட்டியலில் பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என்றார் மதிவாணன்.

    அதைத் தொடர்ந்து ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், திருவாரூர் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துமீனாட்சி, புதுவாழ்வுத் திட்ட மேலாளர் கலைவாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai