சுடச்சுட

    

    திருவாரூர் அருகே ரைஸ்மில் தொழிலாளி வீட்டில் வெள்ளிக்கிழமை நகையைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

    திருவாரூர் அருகே உள்ள வேலங்குடியைச் சேர்ந்தவர் தாஜூநிசா (60). இவர் கூத்தாநல்லூரில் உள்ள ஒரு நெல் அரவை மில்லில் வேலை செய்து வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு, வேலைக்குச் சென்றார். மாலையில் வீட்டுக்கு வந்தபோது, பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த தோடு, மூக்குத்தி, செயின் உள்ளிட்ட 6 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தாஜூநிசா திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai