Enable Javscript for better performance
நகராட்சிப் பள்ளியில் விளையாட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி நகராட்சி மாதிரி நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் த.அன்புச்செல்வி தலைமை வகித்தார். ஜேசிஐ மன்னை முன்னாள் தலைவர் எஸ்.ராஜகோபாலன், கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி விளையாட்டு ஆசிரியர் ஆர்.மைதில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மன்னார்குடி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் தை.புகழேந்தி கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசு, சான்றிதழ்கள் வழங்கினார்.

    இதில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆகியோருக்கு தனித்தனியே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஆசிரியர்கள் ஜி.கவிதா வரவேற்றார். என்.ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai