சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மதுவிற்ற 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.

  திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி மது விற்கப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார் மற்றும் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குள்பட்ட போலீஸார் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.

  அப்போது, கந்தங்குடி சோதனைச் சாவடி அருகே தஞ்சாவூர் பூண்டியைச் சேர்ந்த சாலமன்ராஜ் மகன் டேவிட் (27), திருவிடைமருதூர் ஹரிகிருஷ்ணன் மகன் சத்தியராஜ் (30), சன்னாநல்லூர் அருகே மேல்மருத்துவக்குடி கோபு மகன் அரவிந்தன் (22), கிளியனூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ரமேஷ் (35) உள்ளிட்ட 11 பேர் அனுமதியின்றி சாராயம் மற்றும் மது விற்றது தெரியவந்தது.

  இதையடுத்து, 11 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 100 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai