சுடச்சுட

    

    மன்னார்குடியை அடுத்த பெருகவாழ்ந்தானில் குடிசை தீப்பற்றி எரிந்தது. வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

    பெருகவாழ்ந்தான் பிரதானச் சாலையை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது குடிசை ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த கிருஷ்ணசாமியின் மனைவி, மருமகள் ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். வீட்டுக்குள் தொட்டிலில் தூங்கிக் கொண்டிந்த ஒன்றரை வயது பெண் குழந்தை அட்சனாவை காப்பாற்றுமாறு அவர்கள் கூச்சலிட்டனர்.

    இருவரது அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்-பக்கத்தினர், தீப்பற்றி எரிந்த வீட்டிக்குள் புகுந்து குழந்தையை மீட்டனர். குழந்தை தூங்கிக் கொண்டிருந்த தொட்டில் கயிற்றில் தீ பரவியநிலையில், சிறிது தாமதித்திருந்தாலும், தொட்டில் முழுவதும் எரிந்திருக்கும். உரிய நேரத்தல் குழந்தை மீட்கப்பட்டதால், காயமின்றி உயிர்தப்பியது.

    எனினும் குடிசை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து, பெருகவாழ்ந்தான் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai