Enable Javscript for better performance
சோழப்பாண்டியில் ரத்த தான முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி டெம்பிள் சிட்டி லயன்ஸ் சங்கம், சோழப்பாண்டி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    சோழப்பாண்டியில் எஸ்.அசோக்குமார், கிருபாகரன் நினைவாக, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்கத் தலைவர் ஏ.ராஜதுரை தலைமை வகித்தார். ஆர்.பிச்சைக்கண்ணு, சங்கச் செயலர் கே.தங்கவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்க ஆளுநர் மருத்துவர் சி.அசோக்குமார் முகாமை தொடங்கி வைத்தார்.

    தஞ்சை ராஜாமிராசு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முகாமில் பங்கேற்று ரத்த தானம் பெற்றனர். லயன்ஸ் மண்டலத் தலைவர் என்.கே.ராஜ்குமார், சமூக ஆர்வலர் அல்லா ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் ரத்த தானம் வழங்கியவர்களைப் பாராட்டினர்.

     இந்நிகழ்ச்சியையொட்டி, மகளிருக்கு சமையல் போட்டி நடத்துப்பட்டு, சிறப்பிடம் பெற்றவர்களுக்குப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சோழப்பாண்டி மாரியப்பா மல்லிகொண்டார் தொடக்கப்பள்ளி தாளாளர் ஆர்.பாலாஜி வரவேற்றார். ஆசிரியர் ஏ.சண்முகபாரதி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai