சுடச்சுட

  

  திருவாரூரில், மாவட்ட திமுக இலக்கிய அணி சார்பில், கட்சியின் பொருளாளர் மு.க.  ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

  திருவாரூர் தெற்குவீதியில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர் காமராஜ் பேசியது:

  தமிழகத்தில் திமுக ஆட்சியின்போது அனைத்துத் தரப்பினரும் பயனடைந்தனர்.

  2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று திமுக தலைவர் மு. கருணாநிதி 6-ஆவது முறையாக  முதல்வராகப் பதவியேற்பார் என்றார்.

  கூட்டத்தில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பிரமணியன், நகரச் செயலர் பிரகாஷ், ஒன்றியச் செயலர் தேவா, நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai