சுடச்சுட

    

    நீடாமங்கலம்: வாக்குப்பதிவு மையங்களில் அதிகாரிகள் ஆய்வு

    By நீடாமங்கலம்  |   Published on : 14th March 2016 07:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம் வட்டத்தில் மன்னார்குடி, திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 131 வாக்குப்பதிவு மையங்களை அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே மாதம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. நீடாமங்கலம் வட்டத்தில் ஒருசில பகுதிகள் மன்னார்குடி சட்டப்பேரவை தொகுதிக்கும், மற்றப் பகுதிகள் திருவாரூர் தொகுதிக்கும் உள்பட்டதாகும். இந்த இரு தொகுதிகளுக்காக நீடாமங்கலம் வட்டத்தில் 131 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

    இந்த வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும் பள்ளிக் கட்டடங்களை வட்டாட்சியர் மதியழகன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகின்றனர்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, அரசியல் கட்சியினர் தேர்தலில் வாக்குகளைப் பெற வாக்காளர்களுக்கு அன்பளிப்பு பொருள்கள், பணம் தர முயற்சிக்கிறார்களா? என்பது குறித்தும், இதற்காக அன்பளிப்பு பொருள்கள் எங்கேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பறக்கும் படையினரும், உளவுத் துறையினரும் தீவிரமாககண்காணித்து வருகின்றனர்.

    இதனிடையே, அரசியல் கட்சியினரும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். கட்சிகள் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னரே, தேர்தல் பணிகள் சூடுபிடிக்கும் எனத் தெரிகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai