Enable Javscript for better performance
முதியவரிடம் வழிப்பறி- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் முதியவரிடம் நகையைப் பறித்த மர்ம நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.

    திருவாரூர் கூட்டுறவு நகரைச் சேர்ந்தவர் செல்வம் (64). இவர் பக்கத்து தெருவிலுள்ள தனது மகன் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது, சாலையில் பழுதான இருசக்கர வாகனத்தை சரிபார்ப்பதுபோல் நின்று கொண்டிருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திடீரென்று செல்வத்தை தாக்கி, அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க நகையை பறித்துச் சென்றார். இதுகுறித்து செல்வம் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai