சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 15) தொடங்கும் எஸ்எஸ்எல்சி தேர்வினை 18,696 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

  எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு செவ்வாய்க்கிழமை தொடங்கி ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் தேர்வாக தமிழ் பாடத் தேர்வு மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வினை 8,803 மாணவர்களும், 9,893 மாணவிகளும் என மொத்தம் 18,969 பேர் எழுதுகின்றனர்.

  திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 58 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.

  தேர்வுப் பணியை கண்காணிக்க 83 பேரைக் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கூடங்களில் மின்விளக்கு வசதி, மின்விசிறி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai