சுடச்சுட

  

  "கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவத்துக்கான ஆலோசனை வழங்க வேண்டும்'

  By திருவாரூர்,  |   Published on : 15th March 2016 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நிகழ மகப்பேறு மருத்துவர்கள் தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என்று திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் கூறினார்.

  திருவாரூரில் ஸ்ரீவெங்க்டேஸ்வர் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக தொடங்கப்பட்ட நவீன கருத்தரிப்பு மையத் தொடக்க விழாவில் அவர் பேசியது:

  மகப்பேறு மருத்துவர்கள் பல்வேறு இன்னல்களுக்கிடையே மருத்துவப் பணி செய்கிறார்கள். கருவுற்ற தாய்மார்கள் மருத்துவமனைக்கு வந்தவுடன் சுகப்பிரசவமா அறுவை சிகிச்சை பிரசவமா என்று கேட்கின்றனர்.

  மருத்துவர்கள் மருத்துவ தணிக்கை, ஆட்சியர் தணிக்கை, விடியோ கான்பிரன்ஸ் தணிக்கை என பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். மகப்பேறு மருத்துவர்கள் முடிந்த வரையில் அறுவைச் சிகிச்சை பிரசவத்தை குறைத்து சுகப்பிரசவம் நிகழ கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டுமென்றார் அழ. மீனாட்சிசுந்தரம்.

  தொடர்ந்து செயற்கை கருத்தரிப்பு பற்றிய 10 வழிமுறைகள் குறித்து மருத்துவர் ஜெயம்கண்ணன், செயற்கை கருவுற்றல் ஆய்வகம் குறித்து மருத்துவர் சாந்தி பிரியா ஆகியோர் கருத்துரை வழங்கினர். தொடர்ந்து, கர்ப்பம் தரிக்காத தாய்மார்களுக்கான மகப்பேறு மருத்துவக் குழுவினரின் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

  நிகழ்ச்சியில், மருத்துவர்கள் மகாலட்சுமி, லட்சுமி நாராயணன், சி.எஸ். சுப்ரமணியன், சரஸ்வதி ஜெயராமன், இந்திரா, மஞ்சுளா, அழ. வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai