சுடச்சுட

  

  திருத்துறைப்பூண்டி: பாஜக பிரமுகர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

  By திருத்துறைப்பூண்டி  |   Published on : 15th March 2016 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருத்துறைப்பூண்டி அருகே பாஜக பிரமுகர் வீடு மீது, மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் டி.ஆர்.கணேசன் (40). இவர், திருவாரூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளராக உள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டில் இவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்ததாக திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், இவருக்கு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், கனகராஜ் என்ற காவலர் டி.ஆர்.கணேசன் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு பாதுகாப்புப் பணியில் இருந்தார். அப்போது, கணேசன் வீட்டு வாசலில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். அந்த குண்டுகள் அதிர்ஷ்டவசமாக வெடிக்காததால்

  பாதிப்பு ஏற்படவில்லை.

  தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.ஜெயச்சந்திரன், காவல் துணைக் கண்காணிப்பாளர் எம்.கண்ணதாசன், காவல் ஆய்வாளர் அமுதாராணி உள்ளிட்டோர் நிகழ்விடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

  திருவாரூரிலிருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்

  பட்டது. மேலும், தடயவியல் நிபுணர்களும், வெடிகுண்டு நிபுணர்களும் நிகழ்விடத்துக்கு வந்து, தடயங்களைப் பதிவுசெய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai