சுடச்சுட

  

  திருவாரூர், மன்னார்குடியில் நகைக் கடை உரிமையாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தங்க நகைக்கு ஒரு சதவீதம் கலால் வரிவிதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு தங்க நகை நிறுவனங்கள், வியாபாரிகள், நகைத் தொழில் சார்ந்த தொழிற் கூடங்கள் எதிர்ப்புத் தெரிவித்து கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  தமிழகத்தில் 35,000 நகைக் கடைகள் அடைக்கப்பட்டு, கலால் வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட நகைக் கடைகள் அடைக்கபட்டன.

  இந்நிலையில், திருவாரூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பாக நகைக் கடை உரிமையாளர்கள் நகை சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் வணிகர் சங்கத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் திங்கள் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு ஒருசதவீதம் கலால்வரியை திரும்பப் பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

  நகைக்கடை உரிமையாளர் சங்கச் செயலர் சங்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விஜயபுரம் வர்த்தகர் சங்கத் தலைவர் சி.ஏ.பாலு, பொருளாளர் குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  மன்னார்குடி...

  இதேபோல், மன்னார்குடி தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மன்னார்குடி வட்ட நகை, அடகு வியாபாரிகள் சங்கத் தலைவர் வி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். நகைத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் பி.ஆர்.கணேசன் முன்னிலை வகித்தார்.

  சிறப்பு அழைப்பாளர்களாக மன்னார்குடி வர்த்தகர் சங்கத் தலைவர் கே.ஜெ.ஆர்.பாரதிஜீவா, பொதுச் செயலர் ஆர்.வி.ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  கோரிக்கையினை விளக்கி நகை, அடகு வியாபாரிகள் சங்கச் செயல் தலைவர் ஏ.கிருஷ்ணசாமி, பொருளாளர் எஸ்.உத்திராபதி, நகை தொழிலாளர்கள் சங்கச் செயலர் எஸ்.ராஜேந்திரன், பொருளாளர் எம்.சுகுமார் ஆகியோர் பேசினர்.

  இதில், மன்னார்குடி வட்டத்திற்கு உள்பட்ட நகை, அடகு கடை உரிமையாளர்கள், நகை தொழிலாளர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai