சுடச்சுட

    

    பள்ளி பூட்டுகளில் கம்பிகளை நுழைத்த மர்ம நபர்கள்

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 15th March 2016 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியப் பள்ளி பூட்டுகளில் மர்ம நபர்கள் கம்பிகளை நுழைத்திருந்ததால், பள்ளியை திறக்க காலதாமதம் ஏற்பட்டது.

    முத்துப்பேட்டை ஆசாத்நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி பூட்டுகளில் மர்மநபர்கள் சிலர், ஞாயிற்றுக்கிழமை இரவு இரும்புக் கம்பிகளை நுழைத்துவைத்து, திறக்க முடியாதபடி செய்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

    இந்நிலையில், திங்கள்கிழமை காலை பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர் அசோகன், பூட்டுகளில் கம்பிகள் நுழைத்துவைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர், கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பின்னர், பூட்டுகளுக்குள் இருந்த கம்பிகள் அகற்றப்பட்டு, திறக்கப்பட்டன. இதனால், காலதாமதம் ஏற்பட்டதால் மாணவர்கள் வருகை குறைந்ததாக தெரிவித்தனர்.

    இதுபோன்ற சம்பவங்களில் மர்மநபர்கள் அடிக்கடி ஈடுபட்டுவருவதாகவும், அவர்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கல்வித்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai