சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 17,811 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

  மாவட்டத்தில் 58 தேர்வு மையங்களில் 8,657 மாணவர்கள், 9,154 மாணவிகள் என மொத்தம் 17,811 பேர் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் கண்காணிக்க 6 ஆய்வு அலுவலர்கள், 58 முதன்மை கண்காணிப்பாளர்கள், 58 துறை அலவலர்கள், 27 கூடுதல் துறை அலுவலர்கள், 1,106 அறை கண்காணிப்பாளர்கள், 12 வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள், 14 வழித்தட அலுவலர்கள், 83 பறக்கும் படையினர் என மொத்தம் 1,351 அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

  திருவாரூர் அருகேயுள்ள அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் ஆட்சியர் எம். மதிவாணன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஏ. மணி, கோட்டாட்சியர் ரா. முத்துமீனாட்சி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai