சுடச்சுட

    

    காங்கிரஸ் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 16th March 2016 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முத்துப்பேட்டையில் காங்கிரஸ் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    முத்துப்பேட்டை மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன். பெட்டிக்கடை நடத்தி வருகிறார். ஜாகீர் உசேனின் சகோதரர் முகைதீன் பிச்சை. இவர் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளராகவும், முத்துப்பேட்டை வர்த்தகர் கழகப் பொருளாளராகவும் உள்ளார்.

    ஆசாத்நகரைச் சேர்ந்த சலீம் திங்கள்கிழமை இரவு ஜாகீர் உசேனின் பெட்டிக் கடைக்குச் சென்று தரக்குறைவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றாராம்.

    இதேபோல், ஜாகீர் உசேன் முத்துப்பேட்டை காவல் நிலைய சாலையில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த சலீம் கீழே இறங்கி தான் வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி ஜாகீர் உசேனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

    இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து சலீமை தேடி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai