சுடச்சுட

    

    சாலையை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறியல்

    By திருவாரூர்,  |   Published on : 16th March 2016 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2015 நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைகள் கடுமையாக சேதமடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.

    திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலத்தில் தொடங்கி திருநெய்ப்பேர் வரை அதிகளவில் சாலை சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர். நெடுஞ்சாலைத் துறையினரால் ஒப்பந்தம் கோரப்பட்டும், பலமுறை போராட்டங்களின்போது உடனடியாக சாலை சீரமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை சீரமைக்கப்படவில்லை.

    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூர் அருகேயுள்ள கூடூரில் திருவாரூர் புலிவலம் தொடங்கி சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி, தப்பு அடித்தும் ஒப்பாரி வைத்தும் நூதன முறையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கட்சியின் மாவட்டச் செயலர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற மறியலில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சம்பந்தப்பட்ட துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சாலை சீரமைப்புப் பணி புதன்கிழமை முதல் தொடங்கப்படுமென உறுதியளித்ததன்பேரில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai