சுடச்சுட

    

    திருவாரூரில் உடற்பயிற்சிக் கூடத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 5 கையெறி குண்டுகளை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

    திருவாரூர் கொத்தத்தெருவைச் சேர்ந்தவர் ரா. வைரமுத்து (31). இவர் கடந்த 9-ஆம் தேதி காலை கமலாலயம் தென்கரையில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி முடித்து வீட்டுக்கு புறப்பட்டபோது, மர்ம கும்பல் வைரமுத்துவை வழிமறித்து அரிவளால் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த வைரமுத்து, தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து திருவாரூர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இச்சம்பவத்தைத் தொடர்ந்து உடற்பயிற்சிக் கூடம் கடந்த சில நாள்களாக பூட்டப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை மீண்டும் உடற்பயிற்சிக் கூடத்தை திறந்தபோது, உள்ளே கைத்துணியால் சுற்றப்பட்ட நிலையில் 5 கையெறி குண்டுகள் இருந்தது தெரியவந்தது.

    தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று கையெறி குண்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai