Enable Javscript for better performance
\\\"மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்குகள் பிரசாரம் செய்யப்படும்- Dinamani

சுடச்சுட

    

    "மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்குகள் பிரசாரம் செய்யப்படும்

    By 'திருவாரூர்,  |   Published on : 16th March 2016 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2016, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்குகள் குறித்து பிரசாரம் செய்யப்படும் என்று அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர் ஆபிரகாம்ராய்மணி தெரிவித்தார்.

    திருவாரூரில் செவ்வாய்க்கிழமை, நாகப்பட்டினம் நாடாளுமன்ற இளைஞர் காங்கிரஸ் செயற்குழு மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை காங்கிரஸ் கட்சி திமுகவுடன் இணைந்து சந்திக்கவுள்ளது. தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினரின் பங்கு மிக முக்கியமானது.

    வீடு வீடாகச் சென்று மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்குகள் குறித்தும், இரு அரசுகளின் ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகளின் விரோதப் போக்குகள் குறித்தும் பிரசாரம் செய்யப்படும் என்றார் ஆபிரகாம்ராய்மணி.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai