சுடச்சுட

    

    24 அரசு வாகனங்களுக்கு ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தும் பணி

    By திருவாரூர்,  |   Published on : 16th March 2016 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் ஆணையம் சார்பில், திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் பயன்படுத்தும் 24 வாகனங்களுக்கு செவ்வாய்க்கிழமை ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தும் பணி நடைபெற்றது.

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் கடந்த 4-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததையடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    தொகுதிக்கு ஒரு குழுவென அமைக்கப்பட்டு, 4 தொகுதிக்கும் 4 பறக்கும்படை குழு செயல்பட்டு வருகிறது. இந்த பறக்கும் படையில் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர் அளவில் ஒரு அலுவலர், ஒரு முதன்மை காவல்துறை அலுவலர், மூன்று காவலர்கள், விடியோ ஒளிப்பதிவாளர் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதேபோல், 4 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் பறக்கும் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், வாகனங்களில் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி பணம் எடுத்துச் சென்றாலும், ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் ஆயுதங்கள், மதுபானங்கள், பரிசு பொருள்கள் எடுத்துச் சென்றாலும் அவற்றை பறக்கும் படையினர் ஆய்வு செய்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

    தாற்காலிக சோதனைச்சாவடி அமைத்து, 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் விதிமீறல்களை கண்டறிய வாகனச் சோதனை

    நடத்த நிலை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் குழுவினர் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள். அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பறக்கும் படைக்கான 12 வாகனங்கள், நிலை கண்காணிப்புக் குழுக்களுக்கான 12 வாகனங்கள் என மொத்தம் 24 வாகனங்களுக்கு ஜிபிஆர்எஸ் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

    இதன்மூலம் பறக்கும்படை மற்றும் நிலையன கண்காணிப்புக்குழுவின் செயல்பாடுகள், இருப்பிடத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், தலைமை தேர்தல் ஆணையரும் ஒரே நேரத்தில் கண்காணிக்க முடியும்.

    இந்நிலையில், திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பறக்கும்படை மற்றும் நிலையன கண்காணிப்புக்குழு வாகனங்களுக்கு ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தும் பணியை ஆட்சியர் எம். மதிவாணன் பார்வையிட்டார்.

    அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துமீனாட்சி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) ரெங்கசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai