சுடச்சுட

    

    அரசு மருத்துவக் கல்லூரியில் துப்புரவுப் பணியாளர் சாவு: உறவினர்கள், சக ஊழியர்கள் மறியல் போராட்டம்

    By திருவாரூர்,  |   Published on : 17th March 2016 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு பெண் பணியாளர் இறப்புக்கு, சுத்தம் செய்யப் பயன்படுத்தப்பட்ட தரமற்ற ரசாயனம்தான் காரணம் எனக்கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்களும், சக ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குடவாசல் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சாந்தி (40). இவர், கடந்த சில ஆண்டுகளாக தனியார் அயலக (அவுட்சோர்சிங்) நிறுவனத்தின் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாற்காலிக துப்புரவுப் பணியாளராக வேலை செய்துவந்தார்.

    இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி பணியிலிருந்த சாந்தி, திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த சாந்தி புதன்கிழமை உயிரிழந்தார்.

    இதையறிந்த அவரது உறவினர்கள், சாந்தி இறந்ததுக்கு, மருத்துவமனையில் சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்ட தரமற்ற ரசாயனப் பொருட்களே காரணம் எனக்கூறி, சாந்தியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சக ஊழியர்களும் சேர்ந்து மருத்துவமனை முன்பாக மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது, சாந்தியின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தை விலக்கிக் கொண்டு, சாந்தியின் உடலைப் பெற்றுச்

    சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai