Enable Javscript for better performance
இலக்கண, இலக்கியத் தொடர் கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில், இலக்கிய வளர்ச்சிக் கழகம் சார்பில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த நாள் இலக்கிய, இலக்கணத் தொடர் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் க. சத்தியநாராயணன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தேசியக் கருத்தாளர் முனைவர் ப.இளங்கோ, தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையக் கண்காணிப்பாளர் வ.ரகுபதி, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் த.செங்கதிர், புரவலர் அ.மோகன்தாசு, துணைத் தலைவர் தமிழ்க்குடில் செள.இளங்கோ, பேராசிரியர்கள் நடராசன், செந்தில்குமார், வழக்குரைஞர் சேகர், கல்வியாளர்கள் ம.தனிக்கோடி, இராமமூர்த்தி, மு.தனகோபாலன், த.ரெ.தமிழ்மணி, புலவர்கள் கு.இராமலிங்கம், திருநாவுக்கரசு, எண்கண் சா.மணி, சீனி.கோவிந்தராசு மற்றும் தமிழ்ச்செம்மல் கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மாணவர்கள் ர.அரிகரன், ச.அரிகரன், சி.சபரீசன், ச.சாலினி, க.தேவதர்சினி, சு.நறுமுகை, அ.ரம்யா, கு.வீரப்பிரியா, வெ. அட்சயா, கி.சிந்து, த.லெட்சுமிப்பிரியா ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். தொடர்ந்து, மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai