சுடச்சுட

  

  கூட்டுறவு சங்கங்களில் விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்யக் கோரிக்கை

  By திருத்துறைப்பூண்டி  |   Published on : 17th March 2016 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்று, முத்துப்பேட்டை அருகே நடைபெற்ற விவசாயிகள் நலச் சங்க தொடக்க விழாவில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள பாண்டியில் விவசாயிகள் நலச் சங்கக் கிளை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

  சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் குன்னலூர் வடுகநாதன் தலைமை வகித்தார். விவசாயச் சங்க பிரதிநிதிகள் ஜி.வி.இளங்கோவன், எம்.ஜி.ராமசந்திரன், என்.ஆர்.நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க பிரதிநிதி குமார் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில், மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் சேதுராமன், இயற்கை வேளாண்மை விவசாயி கோவை சண்முகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இக்கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயக் கடன் முழுவதையும் அரசு ரத்து செய்யவேண்டும்.

  மாவட்டம் முழுவதும் உள்ள பாசனஆறுகள், வடிகால்களை உடனடியாக தூர்வார வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500-ஆக உயர்த்தித் தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, நன்னிலம் ஒன்றியச் செயலாளர் முருகேசன், விவசாயப் பிரதிநிதிகள் சேவபுரம் அன்பு செல்வம், திருவாரூர் குமரேசன், எக்கல் இளவரசன், திருப்பத்தூர் சங்கு ராஜகோபால், பல்லவனத்தம் சீனி சின்னையா உள்ளிட்டோர் பேசினார். குன்னலூர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai