Enable Javscript for better performance
கொக்கலாடி விநாயகர் கோயிலில் திருவிளக்குப் பூஜை- Dinamani

சுடச்சுட

    

    கொக்கலாடி விநாயகர் கோயிலில் திருவிளக்குப் பூஜை

    By திருவாரூர்,  |   Published on : 17th March 2016 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்துறைப்பூண்டி அருகே கொக்கலாடி விநாயகர் கோயிலில் திருவிளக்குப் பூஜை அண்மையில் நடைபெற்றது.

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கொக்காலடி சித்தி விநாயகர் மற்றும் இரெட்டியபட்டி சுவாமி கோயிலில் 65-ஆவது மாசி ரேவதி விழா நடைபெற்றது.

    இதையொட்டி, விநாயகர் மற்றும் குருநாதருக்கு அபிஷே-ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, வேளூர், பன்னாள் கோஷ்டியினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்பூண்டி ஆசிரியர் புலவர் முருகேசன் நாயன்மார்களின் பெருமை குறித்துப் பேசினார். தொடர்ந்து, திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. இரவு முத்துப்பல்லக்கில் குருநாதர் திருவுருவப்படம் வீதியுலா நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை, முத்துவேல்சுவாமி குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai