சுடச்சுட

    

    திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைக் கூட்டம்

    By திருவாரூர்  |   Published on : 17th March 2016 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை பொதுக் கூட்டம், குடவாசலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்தில், அப்பேரவையின் மாநிலச் செயலாளர் உமாபாரதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியது:

    தமிழகத்தில் சாதிக் கலவரங்கள் அதிகரித்துள்ளன. சாதிக் கலவரங்கள் உருவாகாமல் தடுக்க பெரியார் சமத்துவபுரங்களை உருவாக்கியவர் திமுக தலைவர் மு.கருணாநிதி. அதற்கு மூடு விழா நடத்தியவர் ஜெயலலிதா.

    பல்வேறு சமூகத்தினரை ஒரு இடத்தில் வசிக்க வைத்து ஒற்றுமையை ஏற்படுத்தியவர்கருணாநிதி என்றார் உமாபாரதி. கூட்டத்துக்கு தலைமை வகித்த கட்சியின் மாவட்டச் செயலர் பூண்டி கே. கலைவாணன் பேசியது:

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார, சமுதாய வீழ்ச்சியை மீட்டெடுக்க திமுக தலைவர் மு.கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைக்க பாடுபடவேண்டுமென்றார் அவர்.

    கூட்டத்தில், மாவட்டக் கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ராஜ் என்கிற கருணாநிதி, ஒன்றியச் செயலாளர்கள் பிரபாகரன், ஜோதிராமன், கலியபெருமாள், அன்பரசு, திருவாரூர் நகரச் செயலர் எஸ்.பிரகாஷ் உள்ளிட்ட திரளான திமுகவினர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai