Enable Javscript for better performance
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 17th March 2016 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரிப் பாசன மாவட்டங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன் விடுத்துள்ள அறிக்கை:

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக அறுவடை இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விவசாயிகள் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்துவந்தனர்.

    தற்போது, அறுவடைப்பணி நிறைவடையும் நிலையில், ஓரளவுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களை தொடராமல் நிறுத்துவதுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் நேரடி கொள்முதல் நிலைய நிர்வாகமும் செய்துவருகின்றன.

    குறிப்பாக, திருத்துறைப்பூண்டி பகுதியில் கொக்காலடி, பாமணி, கொறுக்கை, தலைக்காடு மற்றும் நன்னிலம் வட்டத்தில் திருக்கொட்டாரம், மேனாங்குடி, வாலூர் போன்ற இடங்கள் மானாவாரிப் பகுதியாக உள்ளதால், அப்பகுதிகளில் காலதாமதமாக அறுவடை நடைபெறுகிறது.

    எனவே, இதுபோன்ற பகுதிகளில் கொள்முதல் நிலையங்களை நிறுத்தாமல் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் சில கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai